வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாமை கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு செய்தார்.;
திருப்பத்தூர்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாமை கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு செய்தார்.
வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1,038 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.
திருப்பத்தூர் மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் மேரி இமாகுலேட் பள்ளியில் நடந்த முகாம்களை கலெக்டர் அமர்குஷ்வாஹா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது தாசில்தார் சிவப்பிரகாசம், நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
சிறப்பு முகாம் நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.