வெளிமாநிலங்களுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

வெளிமாநிலங்களுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Update: 2021-11-27 16:59 GMT
ஆம்பூர்

ஆம்பூர் அருகே கன்னிகாபுரம் பகுதியில் வெளிமாநிலங்களுக்கு மினி லாரி மூலம் ரேஷன் அரிசி கடத்துவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

அதன்பேரில் ஆம்பூர் டவுன் போலீசார் அந்த பகுதிக்கு சென்று சோதனை செய்தனர். 

அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை மடக்கி சோதனை செய்தபோது சுமார் 3 டன் ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது.

 இது சம்பந்தமாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் ரேஷன் அரிசியுடன் மினிலாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்