ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
ஆம்பூர் அருகே ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆம்பூர்
ஆம்பூர் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பெரியாங்குப்பத்தில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே தனியாருக்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரம் உள்ளது. இந்த மையத்தில் இன்று சிலர் பணம் எடுக்க சென்றனர்.
அப்போது ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஏ.டி.எம். எந்திரத்தை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
மர்ம நபர்கள் நள்ளிரவில் ஏ.டி.எம்.மையத்துக்குள் புகுந்து எந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்றுள்ளனர்.
ஆனால் முழுமையாக உடைக்க முடியாததால் திருட்டு முயற்சியை கைவிட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதையடுத்து போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.