காரில் சாராயம் கடத்தியவர் கைது

காரில் சாராயம் கடத்தியவர் கைது

Update: 2021-11-27 16:03 GMT
விழுப்புரம்

 விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசார் வளவனூர் ரெயில் நிலையம் அருகில் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனை செய்தபோது அதில் 110 லிட்டர் சாராயம் இருந்ததை கண்டுபிடித்தனர்.  விசாரணையில் காரில் வந்தவர் லிங்கா ரெட்டிப்பாளையத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் என்கிற பன்னீர்(வயது 43) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் காருடன் 110 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்