கஞ்சா விற்ற மூதாட்டி கைது
போடியில் கஞ்சா விற்ற மூதாட்டி கைது செய்யப்பட்டார்.
போடி:
போடி நகர் போலீசார், போஜன் பார்க் என்ற இடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கையில் பையுடன் நின்று கொண்டிருந்த மூதாட்டி ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், போடி கீழத்தெருவை சேர்ந்த முருகன் மனைவி சரஸ்வதி (வயது 65) என்று தெரியவந்தது.
மேலும் அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனையிட்டனர். அதற்குள் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது. மேலும் அவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரஸ்வதியை கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.