கடைக்கு செல்லும் சிறுமிகளுக்கு பாதுகாப்பில்லையா? - பெண் கிறிஸ்தவ போதகர் மீது புகார்

பெண் மதபோதகரை கைது செய்யக்கோரி நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Update: 2021-11-27 08:13 GMT
பூந்தமல்லி, 

குன்றத்தூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் ஆராதனை நடத்தி கொண்டிருந்த பெண் மதபோதகர் பியூலா செல்வராணி நாடார் சமுதாயம் குறித்து இழிவாக பேசியதாகவும் இதையடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என நாடார் சங்கம் சார்பில் குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

இந்த புகாரின் பேரில் பெண் மதபோதகர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். நாடார் சமுதாயத்தை இழிவாக பேசிய பெண் மதபோதகரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் மின்னல் ஸ்டீபன் நாடார் தலைமையில் குன்றத்தூர் பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய நாடார் மகாஜன சபை தலைவர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.

இதில் நாடார் சங்கங்களின் அமைப்புகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பெண் மத போதகரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினார்கள். அவரை கைது செய்யவில்லை என்றால் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தபோவதாக தெரிவித்தனர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க குன்றத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பனங்காட்டு படை கட்சி சென்னை மண்டல தலைவர் ஜெ.டி.சுந்தர்சிங் நாடார், மாநில இளைஞர் செயலாளர் சத்ரியன் பாபு, பாண்டிய நாடு நாடார் பேரவை தலைவர் பொன் கருக்குவேல் ராஜன், செயலாளர் சுயம்புலிங்கம், பொருளாளர் தர்மராஜ், தேசிய நாடார் சங்க பொது செயலாளர் விஜயகுமார், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை தலைவர் சவுந்தரராஜன், சென்னை, சென்னை புறநகர் நாடார்கள் பாதுகாப்பு பேரவை உள்ளிட்ட பல்வேறு நாடார் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்