காரப்பேட்டை அருகே லாரி மோதி 2 பெண்கள் பலி

காரப்பேட்டை அருகே லாரி மோதி 2 பெண்கள் பலியானார்கள்.

Update: 2021-11-27 08:09 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் நாகலுத்து மேடு பகுதியில் வசித்து வருபவர் பாபு. இவரது மனைவி சங்கீதா (வயது 26). இவர் தனது தோழி நீலவேணி(33) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றார்.

காஞ்சீபுரம் காரப்பேட்டை அருகே சங்கீதாவும், நீலவேணியும் கடக்க முற்பட்ட போது காஞ்சீபுரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற காய்கறி லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் லாரியை கைபற்றி தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்