சென்னையில் மழை காரணமாக வாகன போக்குவரத்து மாற்றம்
வடகிழக்கு பருவ மழையையொட்டி சென்னை பெருநகரில் வாகன போக்குவரத்து அவ்வப்போது மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று இரவு சில இடங்களில் வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-;
சென்னை,
சென்னை ரங்கராஜபுரம் இரண்டு சக்கர வாகன சுரங்கப்பாதை போக்குவரத்து தடை செய்யப்பட்டது. கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதால் அங்கு போக்குவரத்து தடைசெய்யப்பட்டு, 2-வது அவென்யூவை நோக்கி திருப்பிவிடப்பட்டது
வளசரவாக்கம் மெகா மார்ட் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதால், அங்கும் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு, ஆற்காடு ரோடு செல்ல கேசவர்தினி சாலை நோக்கியும், அதேபோல், வாணி மஹால் பென்ஸ் பார்க் வரை தண்ணீர் தேங்கியுள்ளதால், ஹபிபுல்லா சாலை மற்றும் ராகவைய்யா சாலை வழியாகவும் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது.
கே.கே.நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு எதிரே உள்ள அண்ணா பிரதான சாலையில் வடிகால் நீர் அமைக்கும் பணியை எளிதாக்கும் வகையில், உதயம் திரையரங்கம் நோக்கி செல்லும் போக்குவரத்து எதிர்திசையில் அனுமதிக்கப்பட்டது. மேலும் உதயம் சந்திப்பில் காசி முனையில் இருந்து அண்ணா பிரதான சாலை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மட்டும் அசோக் பில்லர் நோக்கி திருப்பிவிடப்பட்டது.