தர்மபுரியில் பூட்டிய வீட்டுக்குள் இறந்து கிடந்த வியாபாரி

தர்மபுரியில் பூட்டிய வீட்டுக்குள் வியாபாரி இறந்து கிடந்தார்.

Update: 2021-11-27 04:37 GMT
தர்மபுரி:
தர்மபுரி பஸ் நிலையத்தில் பேனா விற்பனையில் ஈடுபட்டு வந்தவர் உதயகுமார் (வயது 60). ஈரோட்டை சேர்ந்த இவர் பாரதிபுரத்தில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவருடைய வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் உடல் அழுகிய நிலையில் உதயகுமார் இறந்து கிடப்பது தெரியவந்தது.  இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்