விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தென்காசியில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-11-26 21:12 GMT
தென்காசி:
அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் சார்பில் தென்காசி குத்துக்கல்வலசை சந்திப்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசு தொழிலாளர் நல சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றியதை ரத்து செய்ய வேண்டும். வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் எம்.வேல்முருகன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் சுப்பையா, ஏ.ஐ.சி.சி.டி.யூ. மாவட்ட பொறுப்பாளர் அய்யப்பன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். ஆர்ப்பாட்டத்தை ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் இசக்கி துரை தொடங்கிவைத்து பேசினார். விவசாய சங்க தென்காசி மாவட்ட தலைவர் கணபதி முடித்து வைத்து பேசினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் அயூப்கான், மாவட்ட பொருளாளர் தர்மராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்