ஊர்க்காவல் படை வீரர் தற்கொலை

பாளையங்கோட்டையில் ஊர்க்காவல் படை வீரர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-11-26 20:20 GMT
நெல்லை:
பாளையங்கோட்டை பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் முத்துசாமி என்ற அஜித் (வயது 27). இவர் நெல்லையில் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி பூங்கொடி, திசையன்விளை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அஜித் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அஜித்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்