புதுக்கோட்டையில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை
புதுக்கோட்டையில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனையானது
புதுக்கோட்டை
தொடர் மழையினால் தக்காளி வரத்து குறைந்தது. இதனால் புதுக்கோட்டையில் தக்காளி ஒரு கிலோ ரூ.120 வரை விற்பனையானது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். ஆகவே, தக்காளி விலையை கட்டுப்படுத்த இறக்குமதி அதிகரிக்கப்பட்டன. மேலும் குறைந்த விலையில் தக்காளிகளை விற்க கூட்டுறவு துறையின் மூலம் பசுமை கடைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. வரத்து அதிகரிப்பின் காரணமாக புதுக்கோட்டை சந்தைபேட்டை சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனையானது. இதில் கர்நாடக மாநிலத்தில் இருந்து தக்காளிகளை மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்திருந்தனர். இதேபோல தமிழகத்தில் ஒட்டன்சத்திரம் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் தக்காளிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. தக்காளி விலை குறைந்ததால் அதிக அளவில் விற்பனையாகின.