இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
வெள்ளிக்கிழமையையொட்டி இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.;
சாத்தூர்,
சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர் உள்பட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதையடுத்து அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல் சாத்தூர் வடக்கு ரத வீதியில் உள்ள காளியம்மன் கோவில், நாடார் கீழத் தெருவில் உள்ள மாரியம்மன் கோவில், பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் உள்ள பத்ரகாளியம்மன் கோவில்களிலும் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தென் மாவட்டங்களில் கனமழை காரணமாக பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது.