டெல்லியில் போராட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவு:கரூரில் விவசாயிகள் பேரணி

டெல்லியில் போராட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து கரூரில் விவசாயிகள் பேரணி நடத்தினர்.

Update: 2021-11-26 18:18 GMT
கரூர், 
டெல்லியில் விவசாயிகள் போராட தொடங்கி நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது. இதையொட்டி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் விவசாயிகளின் பேரணி நேற்று நடைபெற்றது. இதற்கு ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். விவசாயிகளின் பேரணி கரூா் மனோகரா கார்னரில் உள்ள காமராஜர் சிலை அருகே தொடங்கி ஜவகர்பஜார் வழியாக சென்று தலைமை தபால் நிலையத்தில் நிறைவடைந்தது. இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்