வழிப்பறி வழக்கில் வாலிபர் கைது

வழிப்பறி வழக்கில் வாலிபர் கைது

Update: 2021-11-26 18:06 GMT
ஆற்காடு

ஆற்காடு அருகே உள்ள விளாப்பாக்கத்ைத சேர்ந்தவர்  மாலா (வயது 47). சித்தாளாக வேலை செய்து வருகிறார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு திமிரியை அடுத்த மோசூரில் இருந்து வளையாத்தூர் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்து கம்மல், தாலி மற்றும் ரூ.1000த்தை மர்மநபர் பறித்துச்சென்றார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் திமிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் நேற்று பழையனூரில் இருந்து குண்டலேஏரி செல்லும் சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் திமிரியை அடுத்த கணியனூர் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி (32) என்பதும் தெரியவந்தது.

மேலும் திமிரி சஞ்சீவிராயன் பேட்டையை சேர்ந்த விஜயகுமார் என்பவரிடம் கோவிலுக்குச் செல்லும்போது வழி மடக்கி கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.1000-ஐ பறித்துச் சென்றதும் தெரியவந்தது. 
இதனையடுத்து சத்தியமூர்த்தியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்