நாமக்கல், குமாரபாளையத்தில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், குமாரபாளையத்தில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2021-11-26 17:35 GMT
நாமக்கல்:
ஆர்ப்பாட்டம்
நாமக்கல் பூங்கா சாலையில் மத்திய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் முருகராஜ், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் அசோகன், ஏ.ஐ.சி.சி.டி.யு. மாவட்ட தலைவர் வெங்கடேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். சி.ஐ.டி.யு. மாவட்ட துணை செயலாளர் சிவராஜ், தொ.மு.ச. கட்டுமான வாரிய உறுப்பினர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொ.மு.ச. மாவட்டசெயலாளர் சுந்தரமூர்த்தி, சி.ஐ.‌டி.யு. மாவட்ட செயலாளர் வேலுசாமி, எச்.எம்.எஸ். கலைவாணன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும். புதிய மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். தொழிலாளர்களின் 4 சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும் என்பன உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
குமாரபாளையம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கம், ஐக்கிய விவசாயிகள் சங்கம் ஆகியவை சார்பில் குமாரபாளையத்தில் பள்ளிபாளையம் பிரிவு ரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. 
இதில் நகர தி.மு.க. பொறுப்பாளர் செல்வம், முன்னாள் நகர செயலாளர்கள் ஜெயப்பிரகாஷ், வெங்கடேஷ், நகர காங்கிரஸ் தலைவர் ஜானகிராமன், ஏ.ஐ.டி.யு.சி. நஞ்சப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெறக்கோரியும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்