சந்தானவர்த்தினி ஆற்றில் நீர்வரத்து
சாணார்பட்டி அருகே கனமழைக்கு சந்தானவர்த்தினி ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டது.
திண்டுக்கல்:
சாணார்பட்டியை அடுத்த அய்யாபட்டி சிறுமலை பகுதியில் இருந்து சந்தானவர்த்தினி ஆறு உற்பத்தியாகிறது. இந்த ஆறு அய்யாபட்டி, வேம்பார்பட்டி, கன்னியாபுரம், வீரசின்னம்பட்டி, ராஜக்கப்பட்டி வழியாக சென்று வேடசந்தூர் குடகனாற்றில் கலக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக சந்தானவர்த்தினி ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாய கிணறுகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.