வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

வடமதுரை அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி ஒருவர் பலியாகினார்.

Update: 2021-11-26 17:04 GMT
திண்டுக்கல் : 

வடமதுரை அருகே உள்ள வேல்வார்கோட்டை கடைவீதி தெருவை சேர்ந்தவர் சுல்தான் பீவி (வயது 75). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தார். அப்போது அந்த பகுதியில் பெய்த கனமழைக்கு அவருடைய வீட்டின் சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. அதில் இடிபாடுகளில் சிக்கிய சுல்தான் பீவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம் மற்றும் போலீசார், திண்டுக்கல் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலை மீட்டனர். 

பின்னர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்