20 டன் ரேஷன் கோதுமை கடத்திய 4 பேர் கைது

20 டன் ரேஷன் கோதுமை கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-11-26 17:03 GMT
சிவகங்கை, 
சிவகங்கை அடுத்த சோழபுரத்தில் இருந்து ஒரு லாரியில் ரேஷன் கோதுமை மூடைகளை கடத்துவதாக சிவகங்கை தாலுகா போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தாலுகா இன்ஸ்பெக்டர் மீனாட்சி சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் மற்றும் போலீசார் சிவகங்கையை அடுத்த ஈசனூர் விலக்கு அருகே அந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் அப்போது அந்த லாரியில் 20 டன் எடையுள்ள ரேஷன் கோதுமை மூடைகள் இருந்தன. இதைத்தொடர்ந்து போலீசார் லாரியை ஓட்டிவந்த இளையான்குடியை அடுத்த காரைக் குளம் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் கார்த்திக் ராஜா (வயது45),மதுரை புளியங்குளத்தை சேர்ந்த லோடுமேன் பாலமுருகன் (31) மற்றும் உடன் வந்த மதுரை விரகனூரைச் சேர்ந்த ராமன் (28) பரமக்குடி அடுத்த மன குடியைச் சேர்ந்த அய்யனார் 25 ஆகிய 4 பேரையும் பிடித்து கைது செய்தனர். சிவகங்கை உணவுப் பொருள் குற்றம் உணவு பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணராஜா குடிமைப்பொருள் வழங்கல் வட்டாட்சியர் தங்கமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். 

மேலும் செய்திகள்