மயிலம் ஆவின் பூத்தில் பணம் திருட்டு
மயிலம் ஆவின் பூத்தில் பணம் திருட்டு;
மயிலம்
மயிலம் அருகே உள்ள வீடூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் பெருமாள் (வயது38). மாற்றுத்திறனாளியான இவர் மயிலம் என்ஜினீயரிங் கல்லூரி அருகே ஆவின் பால் பூத் வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் பால் பூத்தை பெருமாள் மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலை பூத்தை திறக்க வந்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது யாரோ மர்ம நபர் பால் பூத் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.5 ஆயிரத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து பால் பூத்தில் பூட்டை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.