பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து தர்ணா
பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து தர்ணா;
ஆம்பூர்
ஆம்பூர் நகரம் ஏ-கஸ்பா பகுதியில் அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.165.55 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி நடைபெற உள்ளது. இதற்கு அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
நகராட்சி ஆணையாளர் ஷகிலா, பொறியாளர் ராஜேந்திரன் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.