அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை நாளை மறுநாளுக்கு ஒத்திவைப்பு
அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை நாளை மறுநாளுக்கு ஒத்திவைப்பு;
விழுப்புரம்
விழுப்புரத்தைச் சேர்ந்த அமைச்சர் பொன்முடி, அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006-ம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இருவரும் ஆஜராக வில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வக்கீல்கள் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை நாளை மறுநாளுக்கு (திங்கட்கிழமை) ஒத்தி வைத்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார். அதேபோல் செம்மண் குவாரி வழக்கில் ஜெயச்சந்திரன், கோபிநாத், சதானந்தம் ஆகிய 3 பேர் ஆஜராகினர். பொன்முடி உட்பட நான்கு பேர் ஆஜராகவில்லை. இதையடுத்து இவ்வழக்கு விசாரணையை வருகிற 30-ந்தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி பூர்ணிமாஉத்தரவிட்டார்.