தேவதானப்பட்டியில் ஆர்ப்பாட்டம்
தேவதானப்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கட்சியின் பெரியகுளம் தாலுகா குழு உறுப்பினர் பிரேம்குமார் தலைமை தாங்கினார்.தேவதானப்பட்டி பேரூராட்சி 14-வது வார்டு கக்கன்ஜி நகரில் சாலை வசதி, குடிநீர் வசதி, பெண்களுக்கான கழிப்பறை, கழிவுநீர் வடிகால் வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.