மலைவாழ் மக்கள் கணக்கெடுக்கும் பணி

கல்வராயன்மலையில் மலைவாழ் மக்கள் கணக்கெடுக்கும் பணி நடந்தது.

Update: 2021-11-26 16:24 GMT
கச்சிராயப்பாளையம், 

கல்வராயன்மலையில் 171 மலை கிராமங்கள் உள்ளன. இதில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். அரசு உத்தரவுப்படி கல்வராயன்மலையில் மலைவாழ் மக்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது குறித்து கண்க்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேல்பாச்சேரி ஊராட்சியில் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆரோக்கியசாமி,  ஊராட்சி செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் வீடு, வீடாக சென்று கணக்கெடுத்தனர். இதில் ஒரு வீட்டில் எத்தனை பேர் உள்ளீர்கள்?, மலைவாழ் மக்களுக்கு நலவாரியம் அட்டை உள்ளதா?, தொழில்கல்வி படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்க கடன் உதவி தேவைப்படுகிறதா?, மகளிர் சுய உதவிக்குழுவில் இருக்கிறீர்களா?, கடன் உதவி தேவைப்படுகிறதா?, மருத்துவ காப்பீடு அட்டை உள்ளதா? என்றும் கேட்கப்பட்டது. அப்போது ஊராட்சி் மன்ற தலைவர் அண்ணாமலை, துணை தலைவர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் பாலு ஆகியோர் உடனிருந்தனர். இதேபோல் கல்வராயன்மலை முழுவதும் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்