ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Update: 2021-11-26 16:13 GMT
ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு பின்புறம் ரேஷன் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சின்னகாமணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். 

அப்போது ஒருவர் அரிசி மூட்டைகளை அடுக்கி வைத்து கொண்டிருந்தது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த நந்தகுமார் (வயது 24) என்பது தெரியவந்தது. மேலும் ஆனைமலை பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி, அதை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. 

மேலும் அவரிடம் இருந்து 20 மூட்டைகளில் தலா 50 கிலோ வீதம் ஒரு டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மொபட் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் ஆனைமலை போலீசார் பிடிப்பட்ட நந்தகுமார் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டைகள், மொபட்டை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்