புகார் அளிக்க வருபவர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்
புகார் அளிக்க வருபவர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்
கோவை
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் பிரதீப் குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் அனைத்து போலீஸ் துணை கமிஷனர்கள், போலீஸ் சரக உதவி கமிஷனர்கள் மற்றும் சிறப்பு பிரிவு உதவி கமிஷனர்கள் பங்கேற்றனர்.
இதில், கோவையில் சட்டம்- ஒழுங்கை பேணி காப்பதில் எந்தவித பாரபட்சமும் இன்றி நேர்மையான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டம் -ஒழுங்கை சீர்குலைப்பவர்கள், கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம், கந்துவட்டி வசூலிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தடை செய்யப்பட்ட லாட்டரி, புகையிலை, கஞ்சா, போதை பொருட்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், சைபர் கிரைம் குற்றங்கள், போக்குவரத்து பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
போலீஸ்நிலையங்களுக்கு புகார் அளிக்க வருபவர்களிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டும்.
புகார்களின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவு மேம்படும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் அறிவுறுத்தினார்.