மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு

மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2021-11-26 15:39 GMT

தேனி:
தேனி பழைய பஸ் நிலையத்தில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சார்பில் மதுவினால் ஏற்படும் தீமைகள் மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு, சட்ட விரோத மதுவிற்பனையை தடுப்பது தொடர்பாக கிராமிய கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதற்கு தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். மேலும் ஆட்டோக்கள், பஸ்கள் போன்ற வாகனங்களில் சட்டவிரோத மதுவிற்பனையை தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. முகாமில் கிராமிய கலைக்குழுவினர் பாடல், நாடகம் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்