வழக்கில் இருந்து வானதி சீனிவாசன் விடுவிப்பு
வழக்கில் இருந்து வானதி சீனிவாசன் விடுவிப்பு
கோவை
தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் கோவை தெற்கு தொகுதியில் பா.ஜனதா சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிட்டார்.
அப்போது தேர்தல் பிரசாரம் முடிந்த மறுநாள் அவர் கோவை பெரியகடைவீதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றார்.
அப்போது பா.ஜனதாவினருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இது குறித்து பெரியகடை வீதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பான வழக்கு கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள 5-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடைபெற்றது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்பட குற்றம் சாட்டப்பட்ட 6 பேரையும் விடுவித்து உத்தரவிட்டார்.