2 வயது சிறுமியிடம் நகை திருட்டு

2 வயது சிறுமியிடம் நகை திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-11-26 15:25 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம்அருகே உள்ள நயினாமரைக்கான் சக்திபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் மனைவி ராஜலெட்சுமி (வயது31). இவர் தனது 2 வயது மகள் தருணிகாவுடன் மதுரையில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு விட்டு ராமநாதபுரம் வந்துள்ளார். புதிய பஸ்நிலையத்தில் டீ குடித்துவிட்டு ஊர் செல்வதற்காக டவுன்பஸ் நிற்கும் இடத்திற்கு வந்துள்ளார். அப்போது மகளின் கழுத்தில் கிடந்த ஒரு பவுன் தங்க சங்கிலியை காணாததை கண்டு ராஜ லெட்சுமி அதிர்ச்சி அடைந்தார். கூட்ட நெரிசலை பயன் படுத்தி யாரோ பறித்து சென்றுள்ளது தெரிந்தது. இதுகுறித்து ராஜலெட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் ராம நாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்