நாடார் சமுதாயம் குறித்து சர்ச்சை கருத்து; பெண் கிறிஸ்தவ போதகரை கைது செய்யவேண்டும்- போலீசில் நாடார் சங்கத்தினர் மனு
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் நடந்த ஆராதனை கூட்டத்தில் கிறிஸ்தவ மத போதகரான பியூலா செல்வராணி நாடார் சமுதாயத்தினர் குறித்து சர்ச்சை கருத்துகளை தெரிவித்திருந்தார்.
இது அனைத்து நாடார் சமுதாய மக்களிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜாதிய வன்மத்துடன் நடந்து கொண்ட அந்த பெண்மணியை உடனடியாக கைது செய்யக்கோரி முடிச்சூர் வரதராஜபுரம் வட்டார நாடார் ஐக்கிய சங்கம் சார்பில் சங்கத்லைவர் பழனி முருகன், செயலாளர் விஜயகுமார், பொருளாளர் சங்கர், மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.