காஞ்சீபுரம் அருகே பாலாற்று கரையோரம் ஒதுங்கிய ஐம்பொன் சிலை

காஞ்சீபுரம் அருகே வளத்தோட்டம் கிராமத்தில் பாலாற்றின் கரையோரம் ஐம்பொன்னால் ஆன ஹயக்ரீவர் உலோக சிலை கரை ஒதுங்கியது.

Update: 2021-11-26 12:25 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்தது.

இதனால் பாலாறு மற்றும் செய்யாற்றில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில் கமுக்கபள்ளம் கிராம பகுதி பாலாற்றின் கரையோரம் சாமி சிலை ஒன்று கிடப்பதை கண்ட பொதுமக்கள். அதை சுத்தம் செய்து வெளியே எடுத்தனர். அந்த சிலை 1½ அடி உயரமும் ¾ அடி அகலமும் கொண்ட ஐம்பொன்னால் வடிவமைக்கப்பட்டு இருந்தது. மேலும் அது ஹயக்ரீவர் என அழைக்கப்படும் கல்வி கடவுளின் சிலை என தெரியவந்தது.

காஞ்சீபுரம் தாசில்தார் லட்சுமி தலைமையிலான வருவாய்த்துறை குழுவினர் சிலையை மீட்டு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்