மதுராந்தகம் அருகே கிளியாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மூதாட்டி சாவு

மதுராந்தகம் அருகே கிளியாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-11-26 12:22 GMT
மதுராந்தகம்,

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (வயது 70). இவரது கணவர் காசி. ஏற்கனவே இறந்து விட்டார். வள்ளியம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்தார்.

நேற்று காலை வள்ளியம்மாள் துணி துவைப்பதற்காக மதுராந்தகம் அருகே கிளியாற்றுக்கு சென்றார். மதுராந்தகம் ஏரியில் தண்ணீ்ர் நிரம்பி நேற்று காலை நிலவரப்படி 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் கிளியாற்றில் சென்று கொண்டிருக்கிறது.

அப்போது வள்ளியம்மாள் எதிர்பாராதவிதமாக ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். அங்கு இருந்தவர்கள் அவரை மீட்க முயன்றனர். மூதாட்டியின் உடல் ஆற்றில் 2 கிலோமீட்டருக்கு அப்பால் கிடப்பதை பார்த்த கிராம மக்கள் இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.

கிராம நிர்வாக அலுவலரது புகாரின் அடிப்படையில் மதுராந்தகம் போலீசில் அவரது மகன் அளித்த புகாரின் பேரில் மூதாட்டியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்