குன்றத்தூர் ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்

குன்றத்தூர் ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Update: 2021-11-26 12:09 GMT
படப்பை, 

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வைப்பூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த பணியில் ஈடுபடுபவர்களை மேற்பார்வையிட அங்கு பணித்தள பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தார்கள்.

இந்த நிலையில் பணியில் இருந்து அவர்கள் விடுவிக்கபட்டதாக கூறப்படுகிறது. எனவே மீண்டும் அந்த பணியை வழங்க வேண்டுமென்று நேற்று குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை 20-க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பின்னர், இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனுவை மேலாளரிடம் வழங்கினார். மனுவை பெற்றுக்கொண்ட மேலாளர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனைத்தொடர்ந்து அங்கிருந்து பெண்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்