செங்குன்றம் அருகே ஆசிரியை பிரம்பால் அடித்ததால் 10-ம் வகுப்பு மாணவன் கண்ணில் காயம்

செங்குன்றம் அருகே ஆசிரியை பிரம்பால் அடித்ததால் 10-ம் வகுப்பு மாணவன் கண்ணில் காயம் ஏற்பட்டது. இதுக்குறித்து மாணவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.;

Update: 2021-11-26 12:00 GMT
செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாலகணேசன் நகரை சேர்ந்தவர் முத்துபாஷா. இவருடைய மகன் இமானுவேல் (வயது 16). செங்குன்றத்தை அடுத்த பம்மதுகுளத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான்.

நேற்று மாணவனை, பள்ளி ஆசிரியை இந்திரா, பிரம்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் இமானுவேலின் கண்ணில் காயம் ஏற்பட்டு வலியால் துடி துடித்தான். உடனே அவனை சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவன் சிகிச்சை பெற்று வருகிறான். இதுகுறித்து செங்குன்றம் போலீசில் மாணவனின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்