புதுவையில் கொரோனாவுக்கு 2 பெண்கள் பலி
புதுவையில் கொரோனாவுக்கு 2 பெண்கள் பலியாகினர்.
புதுச்சேரி, நவ.
புதுவையில் கொரோனாவுக்கு 2 பெண்கள் பலியாகினர். மேலும் 49 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
49 பேருக்கு தொற்று
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 776 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 49 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 794 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 59 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 259 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 33 பேர் குணமடைந்தனர்.
2 பேர் பலி
இதனிடையே 2 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அதாவது காரைக்கால் நேரு நகரை சேர்ந்த 52 வயது பெண்ணும், மாகியில் 87 வயது மூதாட்டியும் பலியாகி உள்ளனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,872 ஆக உயர்ந்துள்ளது.
புதுவையில் தொற்று பரவல் 1.77 சதவீதமாகவும், குணமடைவது 98.30 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் முதல் தவணை தடுப்பூசியை 3 ஆயிரத்து 27 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 4 ஆயிரத்து 149 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 11 லட்சத்து 93 ஆயிரத்து 490 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.