2 நாட்களாக ஒரே இடத்தில் அமர்ந்திருந்த பெண்: ‘தினத்தந்தி’ செய்தியால் அடையாளம் தெரிந்தது
2 நாட்களாக ஒரே இடத்தில் அமர்ந்திருந்த பெண்: ‘தினத்தந்தி’ செய்தியால் அடையாளம் தெரிந்தது
அந்தியூர்
அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் ரைஸ்மில் பகுதியில் கடந்த 2 நாட்களாக 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் யாரோடும் பேசாமல் அமர்ந்திருந்தார். அவர் யார்?, எந்த ஊரைச்சேர்ந்தவர்?, எப்படி அங்கு வந்தார்? என்ற எந்த விவரமும் தெரியாமல் இருந்தது. யாராவது உணவு கொடுத்தாலும் அவர் அதை வாங்கி சாப்பிடாமல் இருந்தார். இதுகுறித்து தினத்தந்தியில் படத்துடன் செய்தி வெளியானது. செய்தியை படித்த அந்த பெண்ணின் உறவினர்கள் கொடுத்த தகவலால் அவர், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நெசவாளர் காலனியை சேர்ந்த சிவகாமி என்பது தெரிய வந்தது. இதையடுத்து சிவகாமியின் உறவினர்கள் ஆப்பக்கூடல் போலீசாரிடம் வந்து சிவகாமியின் அடையாள அட்டையை காட்டி அவரை வீட்டுக்கு அழைத்துச்சென்றார்கள். போலீசாரின் விசாரணையில் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு வழிதவறி வந்துவிட்டது தெரியவந்தது.