ஒவ்வொருவரும் 10 பேரை தடுப்பூசி போட அழைத்து வரவேண்டும். திட்ட இயக்குனர் அறிவுறுத்தல்
சோளிங்கர் பகுதியில் இன்று நடக்கும் தடுப்பூசி முகாமில் ஊராட்சி தலைவர்கள், செயலாளர்கள் ஒவ்வொருவரும் 10 பேரை ஊசி போட அழைத்து வரவேண்டும் என்று திட்ட இயக்குனர் அறிவுறுத்தினார்.
சோளிங்கர்
சோளிங்கர் பகுதியில் இன்று நடக்கும் தடுப்பூசி முகாமில் ஊராட்சி தலைவர்கள், செயலாளர்கள் ஒவ்வொருவரும் 10 பேரை ஊசி போட அழைத்து வரவேண்டும் என்று திட்ட இயக்குனர் அறிவுறுத்தினார்.
ஆலோசனை கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த பில்லாஞ்சி கிராமம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் வருவாய்த் துறை, பேரூராட்சி நிர்வாகம், மருத்துவத்துறை, உள்ளாட்சி துறை இணைந்து 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சோளிங்கர் தாசில்தார் வெற்றி குமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ரேவதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ் சவுந்தராஜன், அன்பரசன், ஒன்றியக்குழு தலைவர் கலைக்குமார் முன்னிலை வகித்தனர்.
10 பேரை அழைத்து வரவேண்டும்
கூட்டதத்தில் மாவட்ட திட்ட இயக்குனர் லோகநாயகி, சமூக பாதுகாப்பு தனித்துணை கலெக்டர் தாரகேஸ்வரி கலந்து கொண்டு இன்று (வியாழக்கிழமை) சோளிங்கர் பேரூராட்சி மற்றும் சோளிங்கர் ஒன்றியங்களில் 60 கொரோனா தடுப்பூசி முகாம் அமைத்து அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும்.
ஊராட்சி தலைவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள் ஒவ்வொருவரும் 5 அல்லது 10 நபர்களை அழைத்து வந்து தடுப்பூசி போட வேண்டும் என்று திட்டஇயக்குனர் லோகநாயகி தெரிவித்தார்.
பேரூராட்சி இளநிலை உதவியாளர் எபினேசன், ஜெயராமன், வட்டார மருத்துவ அலுவலர் கோபிநாத் வட்டார சுகாதார ஆய்வாளர் சவுந்தரபாண்டியன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மோகன், சோளிங்கர் கிராம நிர்வாக அலுவலர் கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.