மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் குடும்பத்துடன் தரிசனம்

ஸ்ரீரங்கம், நவ, 24-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு மத்தியபிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் நேற்று மாலை வருகை தந்தார். அவருக்கு ரெங்கா, ரெங்கா கோபுரம் அருகே கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் தனது மனைவியுடன் கோவில் யானை ஆண்டாளுக்கு பழங்கள் வழங்கி ஆசி பெற்றார். பின்னர் ராமானுஜர் சன்னதி, கார்த்திகை கோபுரம் எதிரே உள்ள ஆஞ்சநேயர் சன்னதி, சக்கரத்தாழ்வார், கருடாழ்வார் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் ஆரியபட்டாள் வாசல் வழியாக சென்று கம்பத்தடியை வழிபட்டு மூலவர் ரெங்கநாதரை தரிசனம் செய்தார்.
தொடர்ந்து தாயார் சன்னதியில் தரிசனம் செய்து விட்டு வடக்கு வாசல் வழியாக காரில் புறப்பட்டு சென்றார். முன்னதாக நிருபர்களிடம் கூறும்போது, நமது நாடு இயற்கை வளத்துடன் வளர்ச்சி அடையவும், அனைவரும் மகிழ்ச்சியுடனும், வளமாக இருக்கவும் இறைவனை பிரார்த்தனை செய்தேன், என்றார்.