மான்-மிளாக்களை வேட்டையாடிய 2 பேருக்கு வலைவீச்சு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மான்-மிளாக்களை வேட்டையாடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-11-23 18:51 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர், 
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சண்முகசுந்தரபுரம் பகுதியில் தோட்டத்தில் வேட்டையாடப்பட்ட மான் மற்றும் மிளா இறைச்சி இருப்பதாக ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் திலீப்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறை ரேஞ்சர் கதிர்காமன் மற்றும் வனவர் பாரதி ஆகியோரை அங்கு செல்ல துணை இயக்குனர் திலீப்குமார் உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் அங்கு சென்று சோதனை செய்தனர். அங்கு  வேட்டையாடப்பட்ட மான் மற்றும் மிளாக்களின் 8 கால்கள் மற்றும் இறைச்சி இருந்தன. அதிகாரிகள் வருவதை அறிந்த 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து மான் மற்றும் மிளாக்களின் கால்களை பறிமுதல் செய்த அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்