வெள்ளத்தில் அடித்து சென்ற முறுக்கு வியாபாரி பிணமாக மீட்பு

வெள்ளத்தில் அடித்து சென்ற முறுக்கு வியாபாரி பிணமாக மீட்பு

Update: 2021-11-23 18:27 GMT
ஆம்பூர்

ஆம்பூர் நடராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் குபேந்திரன் (வயது 50). ெரயில் நிலையங்களில் முறுக்கு வியாபாரம் செய்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு நடராஜபுரம் தரை பாலத்தை கடக்க முயன்ற போது பாலாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரை தீயணைப்புத் துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று சிவராஜபுரம் அருகே உள்ள கானாற்று ஓரத்தில் குபேந்திரன் பிணமாக கிடந்தார். 

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் ஆம்பூர் டவுன் போலீசார் அவரது உடலை மீட்டனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்