ஆம்பூர் அருகே கோவில் உண்டியலை தூக்கி சென்ற மர்ம நபர்கள்

கோவில் உண்டியலை தூக்கி சென்ற மர்ம நபர்கள்

Update: 2021-11-23 18:27 GMT
ஆம்பூர்

ஆம்பூரை அடுத்த அரங்கல்துருகம் ஊராட்சி காட்டுவெங்கடாபுரம் கிராமத்தில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் அர்ச்சகர் பூஜைகளை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். நேற்று காலை கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவிலில் இருந்த உண்டியலை காணவில்லை. பூஜை சாமான்களும் திருட்டு போயிருந்தது.

இதுபற்றி தகவலறிந்த கிராம மக்கள் கோவிலை சுற்றி பார்த்தனர். அப்போது கோவில் பின்புறம் உள்ள காலி இடத்தில் உண்டியல் கிடந்தது. அதில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு மர்ம நபர்கள் உண்டியலை வீசிவிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து உமராபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்