அரக்கோணத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஊர்வலம்

தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஊர்வலம்

Update: 2021-11-23 18:27 GMT
அரக்கோணம்

மத நல்லிணக்க வார விழாவை முன்னிட்டு தேசிய ஒருமைபாட்டை வலியுறுத்தும் வகையில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. பேரிடர் மீட்புப் படை வளாகத்தில் இருந்து புறப்பட்டு நகரிகுப்பம் வரை சென்றனர். பேரிடர் மீட்பு படை பிரிவின் மருத்துவ அலுவலர் சைலேந்திர ராத்தோர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் என சுமார் 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

மேலும், நேற்று காலை சேலம் மாவட்டம் கருங்கல்பட்டி பகுதியில் சிலிண்டர் வெடித்து 4 வீடுகள் தரைமட்ட மானது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டுவரும் நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படை இன்ஸ்பெக்டர் பியாஷி தலைமையிலான 20 வீரர்கள் கொண்ட ஒரு குழு நேற்று காலை சேலம் விரைந்தனர்.

மேலும் செய்திகள்