சின்னசேலம் ஏரி நிரம்பியது

தொடர் மழையால் சின்னசேலம் ஏரி நிரம்பியது.;

Update: 2021-11-23 18:05 GMT
சின்னசேலம், 

சின்னசேலத்தில் சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. சின்னசேலம் நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இந்த ஏரி உள்ளது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக கல்வராயன்மலை அடிவாரத்தில் இருந்து தகரை, கல்லாநத்தம் வழியாக வானாகொட்டாய் மயூராநதி அணைக்கட்டின் வழியாகவும்,  எலவடி, மூங்கில்பாடி கிராம ஏரி வழியாகவும் சின்னசேலம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் வறண்டு கிடந்த ஏரி மெல்ல மெல்ல உயர்ந்து நேற்று முன்தினம் முழுமையாக நிரம்பியது. இதையடுத்து அங்கிருந்து உபரி நீர் வெளியேறி வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஏரி நிரம்பி உபரி நீர் வெளியே செல்வதால் அதனை பொதுமக்கள் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும் அப்பகுதி மக்கள் கூறுகையில் இந்த ஏரியில் குடிமராமத்து பணிகள் முறையாக நடைபெற வில்லை. இதனால் ஏரியில் அதிக அளவில் தண்ணீர் சேமித்து வைக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நீர்வரத்து வாய்க்கால்களையும் சரியாக  தூர்வார வில்லை. முறையாக தூர்வாரி இருந்தால், இந்த ஏரி 3 நாட்களுக்கு முன்பே நிரம்பி இருக்கும் என்றனர்.

மேலும் செய்திகள்