கொத்தனார் தீக்குளித்து சாவு

குஜிலியம்பாறை அருகே கொத்தனார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-11-23 17:04 GMT
குஜிலியம்பாறை: 

குஜிலியம்பாறை அருகே லந்தக்கோட்டை கரும்புளிபட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 34). கொத்தனார். இவர் குடிப்பழக்கத்திற்கு ஆளான நிலையில் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட கார்த்திக் மண்எண்ணெய்யை தன் மீது ஊற்றி தீக்குளித்தார். 

இதில் தீக்காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் இறந்தார். இந்த தற்கொலை குறித்து குஜிலியம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்