தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முற்றுகை

நகை கடன் தள்ளுபடி அறிவிப்பு எதிரொலியாக, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2021-11-23 16:56 GMT
தேவதானப்பட்டி:

தேவதானப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 862 பேர் நகைக்கடன் பெற்றிருந்தனர். இதில் அரசு அறிவித்துள்ள நகை கடன் தள்ளுபடிக்கு 461 பேர் தகுதியற்றவர்கள் என கூட்டுறவு சங்க அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது. 

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்துக்கு நேற்று திரண்டு வந்து திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கிருந்த சங்க ஊழியர்கள் விளக்கம் அளித்தனர். 

ஆனால் அதனை ஏற்காத பொதுமக்கள் தேவதானப்பட்டி மெயின்ரோட்டில் மறியலில் ஈடுபட முயன்றனர். 

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த தேவதானப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இத்ரிஸ் கான் தலைமையிலான போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்