ஆப்பிளுக்கு இணையாக தக்காளி விலை உயர்வு
ஆப்பிளுக்கு இணையாக தக்காளி விலை உயர்வு
கோவை
கோவையில் தக்காளி விலை நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. கிணத்துக்கடவு, நாச்சிப்பாளையம் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து நாட்டு தக்காளியும்,
கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆப்பிள் தக்காளியும் விற்பனைக்கு வருகிறது.
மழை, வெள்ளம் காரணமாக தக்காளி விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தக்காளி வரத்து குறைந்து விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் கோவையில் நேற்று நாட்டு தக்காளி மற்றும் ஆப்பிள் தக்காளி கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதே நேரத்தில் கோவையில் நேற்று ஆப்பிள்பழம் கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஆப்பிள் பழத்தின் விலைக்கு இணையாக தக்காளி பழத்தின் விலையும் அதிகரித்து உள்ளது. இது இல்லத்தரசிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
தக்காளி வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளது என்றும், அதுவரை விலை உயர்ந்தே இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.