மீஞ்சூர் அருகே தாலி கயிற்றால் மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்த வழக்கில் கணவர் கைது

மீஞ்சூர் அருகே தாலி கயிற்றால் மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்த வழக்கில் கணவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-11-23 15:53 GMT
தகராறு

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் ராம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் முதாசர் (வயது34). கட்டிட தொழிலாளி. இவர் ஒடிசா மாநிலம் பல்லேஸ்வரம் கிராமத்தில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அங்கு மீஞ்சூர் பகுதியை சேர்ந்த தேவராஜ் மகள் மீனா (20) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

காதல் திருமணத்துக்கு பின்னர் மீஞ்சூர் வேளாளர் தெருவில் தனியார் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து குடியிருந்து வந்தனர். இதனை தொடர்ந்து கணவர் மற்றும் மனைவி மீனா இருவரும் கட்டிட வேலை செய்து வந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக முதாசர் அடிக்கடி மதுகுடித்து வந்ததால் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது.

கொலை

இந்த நிலையில் கடந்த 45 நாட்களுக்கு முன் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் பெயரில் வங்கி கணக்கு தொடங்க கடந்த 12-ந்தேதி மதியம் 1 மணிக்கு வீட்டில் இருந்து கணவன், மனைவி இருவரும் வெளியே சென்றனர். பின்னர் இருவரும் வீடு திரும்பவில்லை. மீஞ்சூர் அடுத்த அனுப்பம்பட்டு செல்லியம்மன் கோவில் அருகே இளம்பெண் மீனா இறந்து கிடப்பதாக மீஞ்சூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர் தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. கணவர் முதாசர் தலைமறைவாகிவிட்டார்.

மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் மேற்கு வங்க மாநிலம் ராம்பூர் அருகே உள்ள குதிரம்பூர் கிராமத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்