சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஸ்டாலின் வாழ்த்து

Update: 2021-11-23 15:51 GMT

கோவை

கோவையை அடுத்த சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதய்யன் இரு சக்கர வாகன திருடனை ஒரு கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்று மடக்கி பிடித்தார். இந்த வீடியோ வைரலாகி இன்ஸ்பெக்டரை பலரும் பாராட்டினார்கள். 

இந்த நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதய்ய னை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டி னார். 

மேலும் தனது கையெழுத்துடன் கூடிய வாழ்த்து மடலை வழங் கினார். 

அதில், உயிருக்கு அஞ்சாமல் இருசக்கர வாகனம் திருடிய நபரை போராடி பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தியதன் மூலம். மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறீர்கள். 

உங்களின் துணிச்சல் மிக்க செயல் பாடு, காவல்துறையில் உள்ள நேர்மையான துணிச்சலான அனைவருக் கும் பெருமை சேர்ப்பதாகும் என்பது உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்