கும்மிடிப்பூண்டி அருகே வடமாநில வாலிபர் தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே மன உளைச்சல் காரணமாக வடமாநில தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-11-23 15:00 GMT
மன உளைச்சல்

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் முகேஷ் குமார் (வயது 19). இவர் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த பாலகிருஷ்ணாபுரத்தில் தனது நண்பர்களுடன் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து வந்துள்ளார் முகேஷ் குமார். இவர் பல மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதியுற்று வந்துள்ளார். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் சரியாகாததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.

தற்கொலை

இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்