தூத்துக்குடியில் மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சியை மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர் சுகுமார் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடியில் மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சியை மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர் சுகுமார் தொடங்கி வைத்தார்;
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சியை மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர் சுகுமார் தொடங்கி வைத்தார்.
பயிற்சி
தூத்துக்குடி மீன்பிடித் துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள மீன்வளத் தொழில் காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி மையத்தில் மீனவர்களுக்கான ஆழ்கடல் மீன்பிடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி நடந்தது. பயிற்சியில் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர் த.ரவிக்குமார் வரவேற்று பேசினார். மீன்வளத் தொழில் காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி இயக்குனரகத்தின் இயக்குனர் நீ.நீதிச்செல்வன் பயிற்சி குறித்து விளக்கினார்.
தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் ந.வ.சுஜாத்குமார், மீன்வள மாலுமிக் கலை தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் செ.விசுவநாதன், மீன்வளத்துறை மண்டல இணை இயக்குனர் இரா.அமல்சேவியர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக துணை வேந்தர் சுகுமார் கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, நடுக்கடலில் இருக்கும்போது படகு எந்திரத்தில் பழுது ஏற்பட்டால் மீனவர்களே பழுது நீக்குவதற்கு இந்த பயிற்சி மிகவும் உதவியாக இருக்கும,் என்று கூறினார்.
முதலுதவி
பயிற்சியில் கடல்சார் மின்னணுச் சாதனங்களைக் கையாளுதல், கடலில் முதலுதவி மற்றும் மீனவர் பாதுகாப்பு, ஆழ்கடல் வானிலை, மாலுமிக் கலை வரைபடங்கள், ஆழ்கடல் செவுள் வலை மற்றும் ஆயிரங்கால் தூண்டில் வடிவமைப்பு, மாலுமிக் கலை ஒலி சமிக்கைகள் மற்றும் கடற்பயண விதிகள், தீயணைப்பு முறைகள் மற்றும் செயல்விளக்கம், ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளில் மீன்களைக் கையாளுதல் மற்றும் உறைபதனம் செய்தல் ஆகிய தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன
பயிற்சியில் தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள 28 மீனவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் ச.மாரியப்பன் நன்றி கூறினார். முதுநிலை ஆராய்ச்சியாளர் செ.பீனாமோள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.